பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் வாடிக்கையாளர் போர்ட்டல்: கண்ணோட்டம்
பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் இருந்து நீங்கள் கடனை வாங்கும்போது, உங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும் செயல்முறையின் போது ஒப்பிடமுடியாத வசதியையும் எளிமையையும் எதிர்பார்க்கலாம்.
உங்கள் கடனுடன் தொடர்புடைய அனைத்து தகவலும் உங்கள் விரல் நுனியில் கிடைப்பதை உறுதிசெய்ய பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் வாடிக்கையாளர் போர்ட்டல் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.
தொலைதூர பரிவர்த்தனைகளை சாத்தியமாக்குவதன் மூலமும், உங்களின் அனைத்து கடன் விவரங்களையும் அணுகக்கூடியதாக வைத்திருப்பதன் மூலமும் உங்கள் கடன் தவணைக்காலம் தொந்தரவின்றி இருப்பதை உறுதிசெய்கிறோம்.
பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் வாடிக்கையாளர் போர்ட்டல்: சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்
பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் வாடிக்கையாளர் போர்ட்டல் உங்கள் கடனுடன் தொடர்புடைய பல்வேறு தகவல்களையும் செயல்பாடுகளையும் அணுக அனுமதிக்கிறது, அதாவது:
- கணக்கு அறிக்கைகள்
- வட்டிச் சான்றிதழ்கள்
- கடன் என்ஓசிகள்
- தவறவிட்ட இஎம்ஐ-களுக்கான ஈசி பேமெண்ட் வசதிகள்
- சுமூகமான ஃப்ளெக்ஸி-கணக்கு செயல்பாடுகள்
- தனிநபர் தொடர்பு விவரங்கள் ('திருத்தும்' விருப்பத்துடன்)
பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் வாடிக்கையாளர் போர்ட்டல்: அணுகல் மற்றும் உள்நுழைவு செயல்முறை
பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் வாடிக்கையாளர் போர்ட்டலை அணுகுவது சிக்கலற்றது. திரையின் மேல் வலதுபுறம் மூலையில் உள்ள 'வாடிக்கையாளர் உள்நுழைவு' பட்டனை கிளிக் செய்யவும்.
மாற்றாக, பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் வாடிக்கையாளர் போர்ட்டலை அணுக நீங்கள் கீழுள்ள படிநிலைகளை பின்பற்றலாம்.
- அதிகாரப்பூர்வ பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் இணையதளத்தை அணுகவும்
- டாஷ்போர்டில் இருந்து 'எனது கணக்கு' என்பதை தேர்ந்தெடுக்கவும்
- டிராப்-டவுன் மெனுவில் இருந்து 'வாடிக்கையாளர் போர்ட்டல்' விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்
முதல் முறையாக பயனருக்கான பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் வாடிக்கையாளர் போர்ட்டல் உள்நுழைவு செயல்முறை
- உங்கள் பதிவுசெய்த மொபைல் எண்ணுடன் பதிவு செய்யவும்
- உங்கள் மொபைல் எண்ணிற்கு அனுப்பியுள்ள ஓடிபி-யை உள்ளிடவும்
- உங்கள் முதல் உள்நுழைவுக்கு பிறகு உங்கள் கடவுச்சொல்லை ரீசெட் செய்யவும்
- நீங்கள் விரும்பும் எந்தவொரு விவரத்தையும் காண கணக்கை பயன்படுத்தவும்
ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்களுக்கான பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் வாடிக்கையாளர் போர்ட்டல் உள்நுழைவு செயல்முறை
- இணையதள மெனுவில் இருந்து 'வாடிக்கையாளர் போர்ட்டல்' விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்
- உங்கள் பதிவுசெய்த மொபைல் எண் அல்லது கடன் கணக்கு எண்ணை உள்ளிடவும்
- உங்கள் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி அல்லது ஓடிபி மூலம் உள்நுழையலாம்
- வெற்றிகரமாக உள்நுழைந்த பிறகு உங்களுக்குத் தேவையான எந்தவொரு விவரத்தையும் அணுகவும்
உங்கள் கடன் விவரங்களைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, பின்வரும் முறைகள் மூலம் நீங்கள் பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தை தொடர்புகொள்ளலாம்:
- இமெயில் முகவரி: bhflwecare@bajajfinserv.in
- தொடர்பு எண்: 022 45297300
தொடர்புடைய கட்டுரைகள்

இரண்டாவது வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்தல்
5 3 நிமிடம்

என்ஓசி கடிதம் என்றால் என்ன?
4 2 நிமிடம்
பயனர்கள் இவைகளையும் பரிசீலிக்கின்றனர்




